Homeசமூகம்செனட்டராகிறார் டத்தோ சம்பந்தன்?

செனட்டராகிறார் டத்தோ சம்பந்தன்?

கோலாலம்பூர், செப், 19-

ஐபிஎப் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ எம்.சம்பந்தனுக்கு செனட்டர் பதவி வழங்கப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு அதற்கான உறுதிக் கடித்ததை அவர் பெற்றுள்ளதாகவும் இன்னும் சில நாட்களில் அவர் செனட்டராக பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மலேசிய பாட்டாளி இந்தியர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டுமென்ற உன்னத நோக்கத்தில் தொடக்கப்பட்டது ஐபிஎப் கட்சி. அதன் தேசியத் தலைவராக இருந்த டான்ஸ்ரீ பண்டிதன் தேசிய முன்னணிக்கு ஆதரவு தெரிவித்ததன் அடிப்படையில் அவருக்கு செனட்டர் பதவி வழங்கப்பட்டது. அவருக்குப் பிறகு அக்கட்சி பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் வெற்றிக்கு எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் கடுமையாக உழைத்தது. கடந்த 13ஆவது பொதுத் தேர்தலிலும் தேசிய முன்னணியின் வெற்றிக்கு, ஐபிஎப் கடுமையாகப் பாடுபட்டது.

இந்நிலையில் அரசியல் வானில் திடீரென முளைத்த கட்சிகளுக்கெல்லாம் செனட்டர் பதவி வழங்கப்படுவது குறித்து, அண்மைய சில ஆண்டுகளாக சர்ச்சைகள் எழுந்தன. இத்தருணத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎப் கட்சிக்கு மீண்டும் செனட்டர் பதவி வழங்கப்படுவது குறித்து அதன் உறுப்பினர்கள் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்துள்ளார்கள். 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியர்களின் மேம்பாட்டிற்காக உழைத்த ஐபிஎப் கட்சிக்கு மீண்டும் ஏதாவது அரசாங்க அங்கீகாரம் வழங்கப்பட வேண்டுமென அக்கட்சியின் உறுப்பினர்கள் எதிர்பார்த்தார்கள். அந்த எதிர்பார்ப்பு இப்போது நனவாகியுள்ளது.

இந்நிலையில் அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ எம். சம்பந்தனுக்கு செனட்டர் பதவி வழங்கப்படுவதாகத் தெரிகின்றது. அதோடு அதற்கான உறுதிக் கடித்ததையும் அவர் பெற்றுள்ளதாகவும், இவ்வாரம் அல்லது அடுத்த வாரத்திற்குள் அவர் பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்வார் எனவும் அனேகனுக்கு தகவல் கிடைத்துள்ளது.

spot_img

latest articles

explore more