Homeமலேசியாகிரிம் முடிந்து கிரிம் 2.0!

கிரிம் முடிந்து கிரிம் 2.0!

புத்ராஜெயா, செப்.20-

துணைபிரதமர் டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹாமீடி கடந்த ஜூலை மாதத்தில் கூறியதை போல ஒரே மலேசியா மக்கள் கடைகள் (கிரிம்)  சீரமைப்பு பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்படுவதாக உள்நாட்டு வாணிபம், கூட்டுறவு, பயனீட்டாளர் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்து, அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் கூறுகையில், கிரிம் 2.0 என்ற பெயரில் இந்த ஒரே மலேசியா மக்கள் கடை சீரமைக்கப்படவிருப்பதாக கூறினார்.

இந்த கடைகள் மிக மலிவான விலையில் அன்றாடம் தேவைப்படுகின்ற பொருட்களை விற்பதோடு நிற்காமல் வாடிக்கையாளர்களுக்கு அதிகமான தேர்வும் பொதுமக்களுக்கு வர்த்தக வாய்ப்பினையும் ஏற்படுத்தி தருகின்றது.

தற்போது மேற்கொள்ளப்படவிருக்கும் சீரமைப்பு பணிகள் அரசாங்க நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதுடன் உள்ளூரைச் சேர்ந்த உற்பத்தியாளர்களுக்கு வெளியீட்டாளர்களுக்கும் விரிவான வர்த்தக வாய்ப்பை ஏற்படுத்தி தரும்.

இந்த கிரிம் 2.0 குறித்த மேல் விவரங்கள் கூடிய விரைவில் அறிவிக்கப்படும். அதோடு, பொதுமக்களுக்கு அதன் வாயிலாக சிறப்பான சேவையை வழங்க அரசாங்கம் கடப்பாடு கொண்டிருப்பதாக டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் தனது அறிக்கையின் வாயிலாக கூறினார்.

spot_img

latest articles

explore more