ஈப்போ, நவ.14-
நாளை தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட் சீரான மற்றும் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கும் என்று பேராக் மாநிலம் நம்பிக்கை தெரிவித்தது.
இந்த பட்ஜெட் மாநில வளங்களைப் பல்வகைப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அகமது பைசால் அசுமு கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவரும் ஒரு மாநிலமாக பேராவைத் தயார்படுத்துவதிலும் மாநில அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று...
கோலாலம்பூர், நவ.14-
வீடு வீடாக செல்வது உள்பட அனைத்து விதமான நகரும் தேர்தல் பரப்புரைகளுக்கு போலீசின் அனுமதி தேவையில்லை என சட்டத்துறை தலைவர் (ஏ.ஜி) தோமி தோமஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற ஜனநாயக முறையின் கீழ் தேர்தலுக்காக வீடு வீடாக செல்வது உள்பட அனைத்துவிதமான நகரும் தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்வது முக்கியமான ஒன்று.
அவ்வகையிலான பரப்புரைகளை மேற்கொள்வதற்கு, தேர்தல் குற்றச் சட்டத்தின் செக்ஷன் 24பி(3) பிரிவின் கீழ்,...
கோலாலம்பூர், நவ.14-
சனிக்கிழமை நடைபெறவிருக்கும் ஜொகூர் தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில், எதிர்கட்சியான தேசிய முன்னணி மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்யுமென பிரபல இல்ஹாம் செண்டர் என்றழைக்கப்படும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தேசிய முன்னணிக்கு சீன சமூகத்தினரின் ஆதரவு திரும்பியிருப்பதால், அந்த வெற்றி சாத்தியமாகுமென அம்மையம் கூறியுள்ளது.
அந்த மையம் மேற்கொண்ட கருத்து கணிப்பில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கத்தின் தோல்வி (59.1 விழுக்காட்டினர்),...
கோலாலம்பூர், நவ 14-
எம்.டி.யு.சி எனப்படும் மலேசிய வர்த்தக சங்க காங்கிரஸ் மற்றும் , எம்.இ.எப் மலேசிய தொழிலாளர் சங்கம் தங்களது சட்டத்திட்டங்களில் மேற்கொண்ட திருத்தங்களை மனிதவள அமைச்சு வரவேற்பதாக நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
நவம்பர் 11ஆம் தேதி அமைச்சில் நடைபெற்ற சந்திப்புக் கூட்டத்திற்குப் பிறகு சட்டத்திட்டகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. உலகளவில் மலேசிய தொழில்துறையை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தச்...
கோலாலம்பூர், நவ.14-
வீட்டுக்கு வீடு பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கு தஞ்சோங் பியாய் வேட்பாளர்கள் அனைவரும் போலீசாரின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற முடிவு இறுதி நேரத்திலும் தீய நோக்கத்திலும் மேற்கொள்ளப்பட்டது கிடையாது என்று பிரதமர் துறை அமைச்சர் லியோவ் வூய் கியோங் தெரிவித்தார்.
இவ்விவகாரம் தொடர்பான பேச்சு வார்த்தை போலீஸ், தேர்தல் ஆணையம் மற்றும் அரசியல் கட்சிகளுக்கிடையே வேட்பு மனு தாக்கல் தினத்தன்றே மேற்கொள்ளப்பட்டது என்று...
பெக்கான் நானாஸ், நவ.14-
தேசிய முன்னணி இனவெறியைத் தூண்டுவதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரு மக்கள் பிரதிநிதி அனைத்து இனங்களையும் பிரதிநிதிக்கக்கூடியவர். ஆகையால், நான் மலாய்க்காரர்களுக்கு மட்டுமே பிரதமர் அல்ல. மாறாக, இந்நாட்டிலுள்ள அனைத்து இனங்களுக்குமான பிரதமராக தாம் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
தற்போது, தேசிய முன்னணி என்பதே கிடையாது. ஆனாலும், தராசு சின்னத்தை பயன்படுத்தி அக்கூட்டணி மக்களை ஏமாற்றுகின்றது....