Homeமலேசியாகிம்மாவிற்கும் டத்தோஸ்ரீ சைட் இப்ராமிற்கும் முழு ஆதரவு அளிக்கின்றோம்!

கிம்மாவிற்கும் டத்தோஸ்ரீ சைட் இப்ராமிற்கும் முழு ஆதரவு அளிக்கின்றோம்!

கோலாலம்பூர், ஆக. 5-
மலேசிய இந்திய முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கான உரிமை குரலாக இருக்கும் கிம்மா கட்சி தோற்றுவிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரையில் அதன் இலக்கிலிருந்து மாறி செல்லவில்லை. அதன் தேசியத் தலைவர் செணட்டர் டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் தலைமையில் அக்கட்சி வலுவாகவும் சிறப்பாகவும் செயல்பட்டு வருவதாக அக்கட்சியின் மாநில தலைவர்கள், செயலாளர்கள், முதன்மை பொறுப்பாளர்கள் முதலானோர் தெரிவித்தனர்.

டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் நாடு தழுவிய நிலையில் இச்சமூகத்தினரின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். அவருக்கு கிம்மா தலைவர்கள், முக்கிய பொறுப்பாளர்கள், கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் என்றென்றும் பக்கபலமாக இருப்பார்கள் என அவர்களின் சார்பில் பேசிய அக்கட்சியின் துணைத்தலைவர் ஹரிசிராஜுடின் பின் அலாவுடின் தெரிவித்தார்.

இந்திய முஸ்லிம்களின் மேம்பாட்டிற்காகவும் தேவைக்காகவும் தொடர்ந்து போராடும். 2006ஆம் ஆண்டு கட்சியின் தேசிய தலைவர் பொறுப்பை ஏற்ற டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் இன்று வரையில் கட்சியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இக்கட்சியால் இன்று பலர் நன்மையடைந்துள்ளனர். கிம்மாவில் உறுப்பினர்களாக இல்லாத சில தரப்பினர்கள் அண்மையக் காலமாக கட்சியையும் தேசியத் தலைவரையும் குறைக்கூறி வருகின்றனர். அவர்கள் உடனடியாக இத்தகைய போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும். எங்கள் கட்சியை பற்றியும் தேசியத் தலைவர் பற்றியும் குறைகூற அவர்களுக்கு துளியும் உரிமையில்லை.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற கிம்மா கட்சியின் 40 ஆவது பேராளர் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை கட்சியின் தேசியம், மகளிர், புத்ரி, இளைஞர் ஆகிய பிரிவுகள் நிறைவேற்றி வருகின்றன. வருகின்ற 14ஆவது பொதுத்தேர்தலை எதிர்கொள்ள ஓராண்டுக்கு முன்னரே வியூகங்களை வகுத்து அதன்படி களத்தில் செயல்பட்டு வருகிறோம்.

இந்திய முஸ்லிம்களின் பேரியக்கமாக கிம்மா என்றென்றும் திகழும். கட்சியின் மாநில தலைவர்கள், செயலாளர்கள், முக்கிய பொறுப்பாளர்கள் முதலானோர் என்றென்றும் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிமிற்கும் கட்சியின் தலைமைத்துவத்திற்கும் பிளவு படாத ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக ஹரிசிராஜுடின் குறிப்பிட்டார்.

spot_img

latest articles

explore more