சுங்கை சிப்புட், அக்.23-
நாட்டில் தற்போது புகைமூட்டம் ஏற்பட்டுள்ளதால் சுங்கை சிப்புட் சுற்றுப் பகுதியிலுள்ளத் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்காகச் சுவாகக் கவசங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இங்குள்ள 7 தமிழ்ப்பள்ளிகளுக்கு இதுவரை 3,300 சுவாசக் கவசங்கள் விநியோகிக்கப்பட்டன. இவற்றை சுங்கை சிப்புட் தொகுதிக்கான பிகேஆர் தலைவர் நொவிந்தன் கிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்.
இந்த உதவி உண்மையில் பள்ளி நேரங்களில் மாணவர்கள் புகைமூட்டத்தால் பாதிக்கப்படுவதைக் குறைப்பதற்கு ஆகும் என்று நொவிந்தன் தெரிவித்தார்.
இந்த சுவாசக் கவசங்களை விநியோகிக்கும் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொள்ள உதவியாக இருந்த பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் அனைத்துத் தரப்பினருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை மக்களின் நலனைப் பாதுகாப்பது என்பது கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதல்ல, சமூகத்திற்கு நேரடியாக நன்மையளிக்கக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்வதும் ஆகும்.
இடம் மற்றும் வாழ்க்கைப் பின்னணி பேதமின்றிச் சுத்தமான மற்றும் சுகாதாரமான சுற்றுச்சூழலில் கல்வி பயில்வதற்கான உரிமை நம் பிள்ளைகளுக்கு உண்டு.
இந்த சிறு முயற்சி புகைமூட்ட கால கட்டம் முழுவதும் பெற்றோர்களின் கவலையைப் போக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாக ஓர் அறிக்கையில் நொவிந்தன் குறிப்பிட்டார்


