கோலாலம்பூர், ஆக.7-
நியூசிலாந்தை சவாலான சற்றுலா பயணத் தலமாக அறிமுகப்படுத்தும் நோக்கில் ஏர் ஆசியா எக்ஸ் நிறுவனம் இளைஞர்களுக்கான போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.
18 முதல் 32 வயதிற்கு உட்பட்டோரை மையமாக வைத்து நடத்தப்படும் இப்போட்டியில் வெற்றிபெரும் நால்வருக்கு நியூசிலாந்து சென்று வருவதற்கான பயண டிக்கட் வழங்கப்படவுள்ளது. 4 நாட்கள் 3 இரவுகள் அவர்கள் நியுசிலாந்தில் களிக்கவிருப்பதாக ஓர் அறிக்கையில் அந்நிறுவனம் தெரிவித்தது.
சமூக வலைத் தளத்தில் அதாவது இன்ஸ்டாகிராமில் ஆக்கப்பூர்வமான வகையிலான விளையாட்டுகள் வீடியோ மற்றும் புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும்.
மிகவும் கவர்ச்சிகரமான தலைப்பு (caption) மற்றும் பெயர் வைத்து #UltimateXventure மற்றும் #AirAsiaX,@ ஆகியவற்றுக்கு இன்ஸ்தாகிராம் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
கடந்த மாதம் 31ஆம் தேதி தொடங்கப்பட்ட இப்போட்டி வரும் 17ஆம் தேதியுடன் ஒரு நிறைவை அடைய உள்ளது. இதில் வெற்றி பெற்றவர்கள் குறித்த அறிவிப்பு ‘Fly FMஇல் 14 முதல் 17 ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு ஒருவரின் பெயர் அறிவிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


