Homeமலேசியாபொதுச் சேவைத் துறையில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பொதுச் சேவைத் துறையில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கோலாலம்பூர், ஆக.7-
கடந்த பத்து ஆண்டுகளில் பொதுச்சேவைத் துறையில் பெண்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்திருப்பதாக மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ ரோஹானி அப்துல் கரிம் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த 2004ஆம் ஆண்டில் 18.8 விழுக்காடாக இருந்த பெண்களின் எண்ணிக்கை 2016ஆம் ஆண்டில் 35.8 விழுக்காடாக அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். மலேசிய நிறுவன ஆணையத்தின் (எஸ்எஸ்எம்) அடிப்படையில் அரசாங்க மற்றும் தனியார் தொழிற்துறையில் 2016 டிசம்பர் வரை 421,308 பெண்கள் பணிபுரிந்துள்ளதாக மக்களவையில் எழுத்துப்பூர்வமான பதிலில் அவர் குறிப்பிட்டார்.

முடிவு எடுக்கும் நடவடிக்கையில் பெண்கள் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையில் தொழில் துறையில் பெண்களை இயக்குநர்களாக நியமிக்கும் மகளிர் இயக்குநர் திட்டத்தையும் அமைச்சு மேற்கொண்டு வருகிறது.

இத்திட்டத்தின் வழி சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளில் இருக்கும் பெண் இயக்குநர்களைக் காட்டிலும் மலேசிய பெண் இயக்குநர்களின் எண்ணிக்கை மிஞ்சி விடும் என்று டத்தோஸ்ரீ ரோஹானி குறிப்பிட்டார்.
இது மட்டுமின்றி, அரசியலில் பெண்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும் முயற்சியிலும் அமைச்சு முனைப்புக் காட்டி வருகின்றது.

பொதுச்சேவைத் துறையில் 30 விழுக்காடு பெண்கள் பங்கேற்கும் இலக்கு அடையப்படுவதோடு இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்படுவதை அமைச்சு உறுதி செய்யும் என ரோஹானி கூறினார்.

spot_img

latest articles

explore more