செர்டாங், அக். 7
ஸ்ரீ கெம்பங்கானிலுள்ள 7 கடைக்கு முன்புறம் கைவிடப்பட்ட பச்சிளம் சிசு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பிறந்த சில நாட்களே ஆன அந்தக் குழந்தை இன்று காலை பச்சை நிற போர்வையால் மூடப்பட்ட நிலையில் கைவிடப்பட்டுக் கிடந்தது என்று செர்டாங் இடைக்கால போலீஸ் தலைவர் சூப்ரிண்டென்டன்ட் முகமது ரோஸ்டி டாவுட் தெரிவித்தார்.
அந்தக் குழந்தையின் கால்களிலும், முழங்காலிலும் காயங்கள் காணப்பட்டதாகவும் அந்த சிசுவை நாய் கடித்திருக்கலாம் என நம்பப்படுகிறது. அந்த வழியே சென்ற பொது மக்கள் குழந்தை தரையில் கிடந்ததை கண்டு போலீசிற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தற்போது செர்டாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அக்குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


