Homeசமூகம்மக்கள் ஓசை மூத்த ஆசிரியர் பி.ஆர்.ராஜனுக்கு துணையமைச்சர் தியோ நீ சிங் அஞ்சலி

மக்கள் ஓசை மூத்த ஆசிரியர் பி.ஆர்.ராஜனுக்கு துணையமைச்சர் தியோ நீ சிங் அஞ்சலி

செலாயாங், அக்.26-

மக்கள் ஓசை நாளேட்டின் மூத்த ஆசிரியர் பி.ஆர்.ராஜனின் நல்லுடலுக்குத் தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங் இறுதி மரியாதைச் செலுத்தினார்.

செலாயாங்கில் உள்ள பி.ஆர். ராஜனின் இல்லத்திற்கு வருகை புரிந்து அன்னாருக்கு அஞ்சலி செலுத்தியதோடு அவரின் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுக்கும் ஆறுதல் கூறினார்.

“ஊடகத் துறையில் பி.ஆர்.ராஜன் ஆற்றிய சேவைகள் அளப்பரியவை. இவரின் மறைவு ஊடகத் துறைக்குப் பேரிழப்பாகும். இவரின் சேவையை மக்கள் என்றும் நினைவு கூர்வர்” என்றார் துணையமைச்சர்.இவரின் குடும்ப நிதிச் சுமையைக் குறைக்க நிதியுதவியையும் வழங்கினார் தியோ நீ சிங்.

பி.ஆர்.ராஜன் உயர் இரத்த அழுத்தம் காரணமாக செலாயாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையில், துணையமைச்சர் அவரை நேரில் சென்று கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு இம்மாதம் தாபோங் காசே ஹவானா நிதி வழங்கப்பட்டதாகவும் தியோ நீ சிங் குறிப்பிட்டார்.

spot_img

latest articles

explore more