பாங்கி, அக். 20
அதிகாரத்துவ மையம் கோரிக்கை வைத்தால் மட்டுமே முன்னாள் துணைப் பிரதமரும் அம்னோவின் தலைவருமான டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடியின் அனைத்துலகக் கடப்பிதழ் கருப்புப்பட்டியலிடப்படும் என குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முஸ்தாபார் அலி தெரிவித்தார்.
எம்ஏசிசி எனப்படும் ஊழல் தடுப்பு ஆணையம் அல்லது போலீசாரிடமிருந்து இன்னும் எந்தவொரு கோரிக்கையும் பெறவில்லை என்று யூனிடென் பல்கலைக்கழகத்தில் நடந்த வோல்லிபால் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் போது இதனைத் குறிப்பிட்டார்.
நேற்று ஸாஹிட்டின் அனைத்துலகக் கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இது ஊழல் தடுப்பு ஆணையத்தின் வழக்காக இருப்பதால், அதன் உத்தரவிற்கு ஏற்ப குடிநுழைவுத் துறை தகுந்த நடவடிக்கையை எடுக்கும் என அவர் சொன்னார்.
நம்பிக்கை மோசடி, ஊழல் மற்றும் கள்ளத்தனமான நடவடிக்கையில் பணம சேகரித்தல் போன்ற 45 குற்றச்சாட்டுகள் ஸாஹிட் மீது சுமத்தப்பட்டன.


