Homeமலேசியாகேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்படும் - தேர்தல் ஆணையம் !

கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்படும் – தேர்தல் ஆணையம் !

கோலாலம்பூர், டிச.15-

பகாங்கில் உள்ள, கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்கு விரைவில் இடைத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் சனிக்கிழமை தனது ஊடக அறிக்கையின் வழி தெரிவித்துள்ளது. கடந்த 14 ஆவது பொதுத் தேர்தலில், கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வெற்றி பெற்ற முடிவு ரத்து செய்யப்படுவதாக தேர்தல் நீதிமன்றம் கடந்த நவம்பர் 30 ஆம் தேதி அறிவித்தது.

தேர்தல் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து கடந்த 14 நாட்களி மேல்முறையீடு செய்யப்படாததால், கேமரன் மலையில் விரைவில் இடைத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையத்தின் தலைவர் அசஹார் அசிசான் ஹரூன் தெரிவித்துள்ளார். மேல்முறையீடு செய்வதற்கான அவகாசம் டிசம்பர் 14 ஆம் தேதி முடிவடைந்துள்ளது. எனவே அரசியலமைப்பு சட்டத்தின் 54 ஆவது பிரிவு, உட்பிரிவு 1-ன் கீழ், இன்றுத் தொடங்கி அடுத்து வரும் 60 நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் கேமரன் மலையில் இடைத் தேர்தலை நடத்தும் என அவர் மேலும் கூறினார்.

கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி காலியாகி இருப்பதற்கான அதிகாரபூர்வ கடிதம் திங்கட்கிழமை மக்களவை சபாநாயகரிடம் வழங்கப்படும் என அசஹார் தெரிவித்தார். கேமரன்மலை இடைத் தேர்தலுக்கான தேதியை முடிவு செய்ய, தேர்தல் ஆணையம் விரைவில் கூடவிருக்கிறது.

spot_img

latest articles

explore more