aran

மலேசியா – சிங்கப்பூர் இடையே தொழிலாளர் துறை ஒத்துழைப்பு வலுப்படும்: கிக் தொழிலாளர்கள் பாதுகாப்பிலும் கூடுதல் கவனம்! – டத்தோஶ்ரீ ரமணன்

கோலாலம்பூர்: மாறிவரும் தற்கால வேலைவாய்ப்புச் சூழலுக்கு ஏற்ப, மலேசியாவும் சிங்கப்பூரும் தொழிலாளர் துறையிலான தங்களின் கூட்டுறவை மேலும் வலுப்படுத்தும் என்றும், குறிப்பாக கிக் தொழிலாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த இணைந்து செயல்படும் என்றும் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார். சிங்கப்பூருக்கு அதிகாரப்பூர்வ பணி விஜயம் மேற்கொண்ட அவர், அந்நாட்டின் மனிதவள இடைக்கால அமைச்சர்...

சுங்கை பூலோ இளையோருக்கு 10,000 இலவச சைக்கிள்கள் – ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கும் மக்கள் நலத் திட்டத்தை அறிவித்தார் ரமணன்

சுங்கை பூலோ: இளைஞர்களின் ஆரோக்கியம், நலன் மற்றும் சமூகப் பங்கேற்பை மேம்படுத்தும் நோக்கில், சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் 10,000 இளையோருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் சிறப்பு மக்கள் நலத் திட்டத்தை அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் மனிதவள அமைச்சருமான டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் நேற்று அறிவித்தார். இந்த முயற்சி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல், இளையோரின்...

மடானி அரசின் திட்டங்களால் இந்திய சமூகம் தொடர்ந்து பயனடைந்து வருகிறது: டத்தோ ஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்: மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவின் (மித்ரா) பல்வேறு திட்டங்களின் கீழ், நடப்பாண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் 65.5 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான நிதி விநியோகிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, நாட்டின் மடானி அரசின் திட்டங்களால் இந்திய சமூகத்தினர் தொடர்ந்து நேர்மறையான பலன்களைப் பெற்று வருகின்றனர். 3,000-க்கும் மேற்பட்ட இந்திய சமூகத்தினர் கலந்துகொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்...

இந்திய மாணவர்களின் கல்வி வெற்றிக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: வீ.ஆறுமுகம் வலியுறுத்தல்

மாரான்: இந்திய மாணவர்களின் கல்வி வெற்றியும் எதிர்கால முன்னேற்றமும் சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாகும்; எனவே, அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று சபாய் சட்டமன்ற உறுப்பினரும் பகாங் மாநில ம.இ.கா. தலைவருமான வீ.ஆறுமுகம் வலியுறுத்தினார். பகாங், மாரான் அருள்மிகு ஸ்ரீ மரத்தாண்டவர் திருக்கோவிலில், ஸ்ரீமுருகன் கல்வி நிலையத்தின் 32-வது மாபெரும் கல்வி யாத்திரையை முன்னிட்டு நேற்று...

ஒற்றுமையும் வேல் சக்தியும் இந்திய மாணவர்களின் கல்வி வெற்றிக்கு வழிகாட்டும் – சுரேன் கந்தா

மாரான்: இந்திய மாணவர்களின் கல்வி வெற்றிக்காக சமூகமே ஒன்றிணைய வேண்டும். கல்வியின் மூலமே வலிமையான, தன்னம்பிக்கை மிக்க சமூகத்தை உருவாக்க முடியும் என்று ஸ்ரீமுருகன் கல்வி நிலையத்தின் தலைமை இயக்குநர் சுரேன் கந்தா வலியுறுத்தினார். பகாங் மாநிலம், மாரான் அருள்மிகு ஶ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தில் நடைபெற்ற பகாங் மாநில “ஒற்றுமை வேல் பூஜை” நிகழ்வில் உரையாற்றிய அவர்,...

சுங்கை பூலோ சமூக, பள்ளி மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அரசாங்கம் 6 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு

கோலாலம்பூர்: சுங்கை பூலோ பகுதியில் 'மடானி தத்தெடுக்கப்பட்ட கிராமம்' (Program Kampung Angkat Madani) மற்றும் 'மடானி தத்தெடுக்கப்பட்ட பள்ளி' (Program Sekolah Angkat) ஆகிய திட்டங்களை அமல்படுத்துவதற்காக நிதியமைச்சு வாயிலாக மடானி அரசாங்கம் 6 லட்சம் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது. இத்திட்டங்கள் முறையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் செயல்படுத்தப்படுவதை மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவு (மித்ரா)...
spot_img

latest articles