ஈப்போ பிப் 19
இரு ஆடவர்களுக்கு எதிராக பொய் புகார் செய்ததாக தாய் மற்றும் மகளுக்கு எதிராக இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டது.
இங்கு உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வரும் எஸ். பவித்ரா (வயது 18) மற்றும் இவரது தாயார் எஸ்.மகாலட்சுமி ( வயது 41) ஆகிய இருவர் மீது சமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.
இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் நூருள் அபிசா இவ்விருவரையும் தனிநபர் ஜாமின் தலா வெ.3,000இல் விடுவிக்க அனுமதி வழங்கினார்.
இவர்கள் கடந்த ஜனவரி 19ஆம் தேதி பிற்பகல் 3.53 மணியளவில் சி்.கணேசன் (வயது 52) மற்றும் ஆர்.நித்தியானந்தன் ( வயது 39) ஆகிய இரு ஆடவர்களும் தம்முடைய தங்கச் சங்கிலியை பறித்தாக பவித்ரா போலீசில் புகார் செய்தார். இதனை அவரின் தாயார் உறுதிப்படுத்தினார் .
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அது பொய் புகார் என்று தெரிய வந்ததால் தாய் மற்றும் மகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை மார்ச் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


