செமினி, பிப் 22-
செமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணி வேட்பாளரான முகமட் ஐமான் சைலானி தோல்வி கண்டால் பாஸ் கட்சியை கூறைக்கூடாது என அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹடி அவாங் தெரிவித்திருக்கின்றார்.
இந்த இடைத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணியில் உறுப்பு கட்சியாக செயல்படும் ஜசெக எனப்படும் ஜனநாயக செயல் கட்சியும் மக்கள் நீதிக்கட்சி எனப்படும் பிகேஆரும் செமினி சட்டமன்ற தொகுதியில் இதுவரை வேலை செய்யவில்லை என ஹடி அவாங் சாடினார்.
இந்த இரு காரணங்களும் செமினி சட்டமன்ற தொகுதியில் நம்பிக்கை கூட்டணி தோல்வி காண்பதற்கு வழிவகுக்கும். இச்சூழ்நிலையில் பாஸ் கட்சியை எந்தக் காரணத்திற்காகவும் நம்பிக்கை கூட்டணி குறைக்கூறக்கூடாது என்பதையும் அவர் வழியுறுத்தியிருக்கின்றார்.
கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியின் இடைத்தேர்தலை காட்டிலும் ஜெமினி சட்டமன்ற இடைத்தேர்தல் மாறுபட்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த வாரம் பிரதமர் மகாதீர் முகமட்செமினி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளரை கட்சி ஆதரிக்காது எனக் கூறியிருந்தார். இந்தக் கூற்றை கட்சியின் தலைமைச் செயலாளர் மறுத்திருந்தார். இந்நிலையில் செமினி தொகுதியில் கேமரன் மலையைக் காட்டிலும் பாஸ் தேசிய முன்னணிக்கு கூடுதலான வலு சேர்த்துள்ளதாக கூறிவருகிறது


