Homeமலேசியாசிலாங்கூரில் பல தொகுதிகளில் மும்முனைப் போட்டிகளா?

சிலாங்கூரில் பல தொகுதிகளில் மும்முனைப் போட்டிகளா?

கோலாலம்பூர், ஆக.25-
வருகின்ற 14ஆவதுப் பொதுத்தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் பல தொகுதிகளில் மும்முனைப் போட்டிகள் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜசெக, அமானா நெகாரா ஆகிய கட்சிகளின் நெருக்குதல் காரணமாக சிலாங்கூரில் உள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளில் 42 தொகுதிகளில் போட்டியிட போவதாக பாஸ் கட்சி கூறியுள்ளது. 42 தொகுதிகளில் போட்டியிடுவதில் பாஸ் உறுதியாக இருந்தால் பல தொகுதிகளில் மும்முனைப் போட்டி நிலவும் என்று அரசியல் ஆய்வாளரான டாக்டர் முகமது அசுடின் முகமது சானி தெரிவித்துள்ளார்.

கடந்த பொதுத்தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் பாஸ் கட்சி 21 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டது. பல தொகுதிகளில் மும்முனை போட்டிகள் நிலவினால் பாஸ் கட்சிக்கு அது சாதகமாக இருக்காது. பாஸ் கட்சியால் சிலாங்கூரில் தனித்து இயங்க முடியாது. அவர்கள் கூட்டணி அமைத்தாக வேண்டும். இதன் மூலமே போதுமான வாக்குகளை அவர்கள் பெற முடியும் என அவர் கூறினார்.

spot_img

latest articles

explore more