கோல லாங்காட், நவம்பர் 3-
கோல லாங்காட் தொகுதியின் தீபாவளி திறந்த இல்ல உபரசரிப்பு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் நீர், நிலம், இயற்கைவள அமைச்சரும், கோல லாங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டார்.
கோல லாங்காட் சுற்று வட்டார மக்களும், மேலும் சில பிரமுகர்கள் உட்பட சுமார் 1000 பேர் இந்த திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டனர்.
டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறுகையில், இந்த தீபாவளி பண்டிகையை ஒற்றுமையாக கொண்டாடுவதோடு வசதி குறைந்தோருக்கும் ஆதரவற்றோருக்கும் பொருளதவி வழங்கி மகிழ்ச்சியாக கொண்டாடுவோம் என அவர் தெரிவித்தார்.

மக்கள் வாழ்வு மேலோங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசாங்கம் பல திட்டங்களை நம் சமுதாயத்திற்காக வகுத்து வைத்துள்ளது. அதனை நம் மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
நிகழ்வில் கலந்து கொண்ட சிறார்களுக்கு அங் பாவ் அன்பளிப்பு வழங்கப்பட்டது.



