Homeஅரசியல்தஞ்சோங் பியாய் தோல்வி; பக்காத்தானை பலவீனப்படுத்தாது! -முஹமட் சாபு

தஞ்சோங் பியாய் தோல்வி; பக்காத்தானை பலவீனப்படுத்தாது! -முஹமட் சாபு

கோலாலம்பூர், நவ.17-

ஜொகூர், தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில், தேசிய முன்னணியிடம் தோல்வி கண்டிருந்தாலும், அது பக்காத்தான் ஹராப்பானின் ஊக்கத்தை பலவீனப்படுத்தாது.

அந்த தோல்வியை அக்கூட்டணி திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்வதாக அமானா கட்சியின் தலைவரான முஹமட் சாபு தெரிவித்துள்ளார்.

மேலும், மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் வகையில், தொடர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும் என்கிற உத்வேகத்தையும் அது தந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின், அனைத்து முயற்சிகளும் திட்டங்களும் மக்களைச் சென்றடையும் பொருட்டு, அதன் ஆட்சியை தொடர்ந்து சீர்ப்படுத்த வேண்டும் என்பதையே அந்த தேர்தல் முடிவு வலியுறுத்துகின்றது.

இதன் பிறகு, பக்காத்தானின் உறுப்பு கட்சிகளிடையிலான தலைமைத்துவ இடைவெளியைக் குறைக்க பாடுபடுவதோடு, மக்களுக்கு விளக்கங்களை அளிக்கக்கூடிய நிகழ்ச்சிகளும் அதிகரிக்கப்படும் என முஹமட் சாபு குறிப்பிட்டுள்ளார்.

spot_img

latest articles

explore more