Homeமலேசியாமிகுந்த பாதுகாப்புடனும், அணுக்கமான கண்காணிப்புடனும் தொடங்கியது 2021 ஆண்டு 1 க்கான நேரடி வகுப்பறை கல்வி...

மிகுந்த பாதுகாப்புடனும், அணுக்கமான கண்காணிப்புடனும் தொடங்கியது 2021 ஆண்டு 1 க்கான நேரடி வகுப்பறை கல்வி முறை – பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி

பீடோர் | மார்ச் 1

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருக்கும் வேளை 2021ஆம் ஆண்டுக்கான முதலாம் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் நேரடியாகக் கல்வி கற்க பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

அதன்படி இன்று முதல் செயல்படத் தொடங்கிய நிலையில், பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியில் இவ்வாண்டு 29 மாணவர்கள் தங்களின் தொடக்கக் கல்வியைத் தொடங்கினர் என அப்பள்ளியின் புறப்பட்ட நடவடிக்கைப் பிரிவு துணைத் தலைமையாசிரியர் குமரன் தெரிவித்தார்.

தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு எனும் பரப்புரையால் இவ்வாண்டு மாணவர்கள் எண்ணிக்கை மனநிறைவு அளிப்பதாகவும் அவவர் கூறினார்.

மாணவர்களின் பாதுகாப்பு விவகாரங்களில் பள்ளி நிர்வாகம் அக்கரை கொண்டுள்ளது. மேலும், ஆசிரியர்கள் அதிக சிரத்தை எடுத்து, கூடல் இடைவெளியைக் கண்காணித்து அன்றாட கற்றல் கற்பித்தலை மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், சிறார் பள்ளியில் இவ்வாண்டு 37 மாணவர்கள் இணைந்துள்ளனர். வகுப்பறைகளில் சில மாற்றங்கள் செய்து அமரும் இடங்களை இடைவெளி விட்டு அமைத்து கற்றல் கற்பித்தல் தொடங்கியுள்ளதாகவும் குமரன் கூறினார்.

spot_img

latest articles

explore more