Homeகலை உலகம்தன் சொத்துகளை ஏழைகளுக்கு எழுதிவிட்டு ரஜினி அரசியலுக்கு வரட்டும்! -சிங்கமுத்து

தன் சொத்துகளை ஏழைகளுக்கு எழுதிவிட்டு ரஜினி அரசியலுக்கு வரட்டும்! -சிங்கமுத்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற பேச்சு சமீப காலமாக இருந்து வரும் நிலையில், நடிகர் சிங்கமுத்து தற்போது இது பற்றி சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார்.

ரஜினி பற்றி அவர் பேசியிருப்பதாவது..

“நடிகர் ரஜினிகாந்த் வயதாகி முதுமை கண்டு விட்டார். இனி அவர் அரசியலுக்கு வந்து எந்த பலனும் இல்லை. இப்போது முடிந்தால் மக்களுக்கு சேவை செய்வேன் என்று ரஜினி கூறுகிறார்.”

“அவர் சம்பாதித்த பணத்தில் இது வரை எவ்வளவு பணத்தை மக்களுக்காக செலவு செய்துள்ளார்? ரஜினி நடிக்கலாம்; சம்பாதிக்கலாம்; ஆனால் ஆட்சி செய்ய ஆசைப்படக்கூடாது. தனது சொத்துகளை எல்லாம் ஏழைகளுக்கு எழுதி வைத்து விட்டு ரஜினி அரசியலுக்கு வரட்டும்” என சிங்கமுத்து கூறியுள்ளார்.

spot_img

latest articles

explore more