Homeகலை உலகம்ஜனவரியில் ஆரம்பமாகும் விஜய் - முருகதாஸ் படம் !

ஜனவரியில் ஆரம்பமாகும் விஜய் – முருகதாஸ் படம் !

சென்னை, செப்.19 – 

துப்பாக்கி’, `கத்தி’, படங்களின் மெகா வெற்றியைத்  தொடர்ந்து தளபதி விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் இணையும் விஜய்யின் 62-வது படம் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தொடங்க இருக்கிறது.

இந்திய கிலிட்ஸ் இணையப்பக்கத்தில் ரெட் கார்பேட் நிகழ்ச்சியில் ஏ.ஆர். முருகதாஸ் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

`மெர்சல்’ படத்தை முடித்த விஜய் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் உடன் மூன்றாவது முறையாக இணைகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தொடங்க இருக்கிறது.

அந்த படம் துப்பாக்கி படத்தின் இரண்டாவது பாகம் இல்லை என்பதும் உறுதியாகி இருக்கிறது. மாறாக இது ஒரு புதுமையான கதையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

`ஸ்பைடர்’ படத்தின் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வரும்  ஏ.ஆர்.முருகதாஸ், `ஸ்பைடர்’ ரிலீசுக்கு பிறகு விஜய் படத்திற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட இருக்கிறாராம். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

spot_img

latest articles

explore more