சென்னை, செப்.19-
சதுரங்க வேட்டை படத்தின் இயக்குனர் எஸ். வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் பிரீத் சிங் நடிக்கும் தீரன் : அதிகாரம் ஒன்று திரைப்படம் நவம்பர் 17 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் முதல் முன்னோட்டம் ( டீசர் ) வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகவுள்ள வேளையில் தீபாவளி திருநாளை முன்னிட்டு டிரைலர் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படத்தை தயாரித்துள்ள டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
இதற்கு முன், தீரன் அதிகாரம் ஒன்று தீபாவளி திருநாளில் தளபதி விஜய்யின் ‘மெர்சல் ‘ படத்துடன் மோதும் என இணைய ஊடகங்களில் கூறப்பட்டிருந்தது. எனினும் படத்தை தயாரித்துள்ள வாரியர் டிரீம்ஸ் நிறுவனம் முடிவை மாற்றி கொண்டு படத்தை நவம்பரில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.


