கோலாலம்பூர், செப். 19-
எதிர்க்கட்சி முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று பகல் 2 மணியளவில் கோலாலம்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்வாரின் மகளும், லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான நூருள் இஸா அன்வாரும், பி.கே.ஆர். உதவித் தலைவர் ரபிசி ரம்லியும் இதனை உறுதிப்படுத்தினர்.
தமது தந்தையின் ரத்த அழுத்தம் சீராக இல்லை எனவும் தோள் பட்டையில் ஏற்பட்ட பழைய காயத்திற்கு அவர் பிசியோதெராபி சிகிச்சை பெற வேண்டியுள்ளது எனவும் நூருள் கூறினார்.


