Homeவர்த்தகம்கோலாலம்பூரில் மாபெரும் மிலாது மாநாடு

கோலாலம்பூரில் மாபெரும் மிலாது மாநாடு

கோலாலம்பூர்:

மலேசிய இந்திய முஸ்லிம் தேசியப் பேரவை (PERMIM) உள்ளிட்ட அமைப்புகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆறாவது மாபெரும் மிலாது மாநாட்டில் நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

“அறநெறி வாழ்வியல் – அருள்பெற்ற சமூகம்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இம்மாநாடு, கோலாலம்பூரிலுள்ள மாட்ரேட் மாநாட்டு மையத்தில் காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடைபெற்றது. PERMIM, இமிம் (IMIM) மற்றும் மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கம் (PRESMA) ஆகிய அமைப்புகள் இணைந்து இதனை ஏற்பாடு செய்தன.

கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய சமய விவகாரத்துறையின் (MAIWP) தலைவர் டத்தோ சையத் கமாருல்ஸமான் பின் சையத் கபீர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கிவைத்தார். தமிழக ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் மௌலானா மெளலவி P.A. காஜா முயீனுத்தீன் பாகவி, பேராசிரியர் டத்தோ டாக்டர் முஹம்மது ஃபாரித் ரவி பின் அப்துல்லாஹ் உள்ளிட்ட மார்க்க அறிஞர்கள் சிறப்புரையாற்றினர்.

இஸ்லாமிய அழைப்புப் பணியில் நீண்டகாலமாக ஈடுபட்டு வரும் டாக்டர் மன்சூர் மரைக்கானுக்கு அவரது சேவையைப் பாராட்டி மௌலூதுர் ரசூல் விருது வழங்கப்பட்டது.

மாநாட்டைச் சிறப்பாக நடத்துவதற்குப் பங்களித்த அனைவருக்கும் மாநாட்டுத் தலைவரும் PERMIM தேசியத் தலைவருமான அஸ்மான் ஷா நன்றி தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more