சுபாங் ஜெயா, செப்.21 –
சுபாங் ஜெயாவில், ஜாலான் சுபாங்கில் உள்ள கிடங்கு ஒன்றில் இன்று காலை எரிவாயு வெடித்ததில் எட்டு அந்நிய தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
காலை எட்டு மணிக்கு நிகழ்ந்த இந்த சம்பவத்தில் 21 முதல் 30 வயதுடைய மியான்மார், நேப்பாளத் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். அதில் ஒருவருக்கு கடுமையான தீப்புண் காயம் ஏற்பட்டுள்ளது.
அதேவேளையில் ஒருவரின் கால் முறிந்ததாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசி முஹமட் அஸ்லின் சடாரி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தீயணைப்பு மீட்புத் துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


