Homeமலேசியாசமயப்பள்ளியில் வேண்டுமென்றே தீ வைக்கப்பட்டது - தீயணைப்பு மீட்புத்துறை !

சமயப்பள்ளியில் வேண்டுமென்றே தீ வைக்கப்பட்டது – தீயணைப்பு மீட்புத்துறை !

கோலாலம்பூர், செப்.21 –

கோலாலம்பூர், டத்தோ கிராமாட்டில் உள்ள டாரூல் கூரான் இத்திபாஃக்கியா சமயப்பள்ளியில் நிகழ்ந்த தீ விபத்து திட்டமிடப்பட்ட ஒரு சதிச் செயல் என மலேசிய தீயணைப்பு மீட்புத்துறை வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

தீ சம்பவம் நிகழ்ந்த அன்று அந்த சமயப்பள்ளியின் முன் வாசல் கதவின் அருகே இரண்டு எரிவாயு தோம்புகள் கண்டெடுக்கப்பட்டதாக மலேசிய தீயணைப்பு மீட்புத்துறையின் தலைமை இயக்குனர் டத்தோ வான் முஹமட் நோர் இப்ராஹிம் தெரிவித்தார். அந்த இரண்டு எரிவாயு தோம்புகளும் காலியாக இருந்ததாகவும் அதில் இருந்து வெளியேறிய எரிவாயு தீ சம்பவத்துக்கு முக்கிய காரணமாகும் என அவர் சொன்னார்.

அதேவேளையில் கே9 பிரிவின் மோப்ப நாய்கள் , அந்த முன் வாசல் கதவின் அருகே ஏழு இடங்களை கண்டுப்பிடித்ததாகவும் அதில் இருந்து ஏழு மாதிரிகள் சேகரிக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார். கோலாலம்பூர் தீ விசாரணை மற்றும் ரசாயண ஆய்வு கூட்டத்தில் இந்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும் அதில் எளிதில் தீ பற்றக்கூடிய திரவங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அந்த சமயப்பள்ளியில் உள்ள காலணி வைக்கும் இடம், குளிக்கும் துண்டு, முன் கதவுகளில் பெட்ரோல் ஊற்றப்பட்டது தங்களின் விசாரணையில் தெரிய வந்ததாக வான் முஹமட் நோர் கூறினார்.

தீ விரைவாக பரவியதற்கு இரண்டு எல்பிஜி கலன்களிலிருந்து வெளியான எரிவாயு முக்கிய காரணமாகும்”, என வான் முஹமட் இன்று புத்ரா ஜெயாவில் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார். இவற்றின் அடிப்படையில் விசாரணையாளார்கள் அது “வேண்டுமேன்றே வைக்கப்பட்ட தீ” என்ற முடிவுக்கு வந்திருப்பதாக அவர் சொன்னார்.

spot_img

latest articles

explore more