Homeசமூகம்தேசிய கொடியில் பணியாளர்கள் சீருடை : பேரின்பம் மலேசியா கண்டனம்!

தேசிய கொடியில் பணியாளர்கள் சீருடை : பேரின்பம் மலேசியா கண்டனம்!

கோலாலம்பூர், செப், 21-

தேசிய கொடியில் உணவக பணியாளர்கள் சீருடை அணிந்திருந்த விவகாரத்தை பேரின்பம் மலேசியா வண்மையாக கண்டிக்கிறது என அதன் தலைவர் யு.தாமோதரன் நேற்று வலியுறுத்தினார். உணவக பணியாளர்கள் மலேசியா கொடியின் வண்ணத்தில் உடையணிந்து அதற்கு மேல் ஜாலூர் கெமிலாங் ஏஃப்ரன் அணிந்திருந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் ரொட்டி சானாய் போடும் பகுதியில் நான்கு பணியாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்கள் மலேசிய கொடியினைப் போன்று உடையணிந்துள்ளனர்.

இந்த புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது? உணவகத்தின் பெயர் ஆகிய தகவல்கள் ஏதும் கிடைக்க பெறவில்லை. ஆனால், இந்த உணவகத்தின் செயலை சமூக வலைத் தள பயனர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். நாட்டின் தேசிய கொடியை இவ்வாறு கொச்சைப்படுத்தக்கூடாது.

தேசப்பற்றுக்கும் மரியாதைக்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்று தாமோதரன் கூறினார். தேசிய கொடியிலான ஆடைகள் அணிவது அந்நிய தொழிலாளர்களுக்கு பெரிய விஷயமாக இருக்காது.

ஆனால் மலேசியர்களான நமக்கு அது மிகப் பெரிய அவமதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும். ஆகவே இவ்விவகாரம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
அதே வேளையில் சம்பந்தப்பட்ட உணவக உரிமையாளர் இதுபோன்ற சம்பவங்கள் வரும் காலங்களில் நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தாமோதரன் கேட்டுக் கொண்டார்.

spot_img

latest articles

explore more