Homeமலேசியாசமயப்பள்ளி தீ சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கு மரண தண்டனை விதிக்க முடியாது!

சமயப்பள்ளி தீ சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கு மரண தண்டனை விதிக்க முடியாது!

கோலாலம்பூர், செப்.21- 

டத்தோ கிராமாட் , டாரூல் கூரான் இத்திபாஃக்கியா சமயப்பள்ளியில் நடந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 18 வயதுக்கு கீழ்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க முடியாது என பிரதமர்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ  அசாலினா ஒத்மான் சைட் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி அந்த சமயப்பள்ளியில் ஏற்பட்ட தீ சம்பவத்தில் 23 பேர் பலியாகினர்.2001 சிறார் சட்டத்தின்  97 பிரிவு (1)-ன் கீழ் 18 வயதுடைய சிறார் மீது மரண தண்டனை விதிக்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளதாக அசாலினா தெரிவித்தார்.

எனினும் மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்லது மாநில ஆளுநர்களின் அனுமதியின் பேரில் குறிப்பிட்ட கால அவகாசத்துக்கு சிறைத் தண்டனை வழங்க முடியும் என அசாலினா மேலும் தெரிவித்தார்.

அதேவேளையில் அந்த சட்டத்தின் 94 ஆவது பிரிவின் கீழ், சம்பந்தப்பட்ட இளைஞர்களின் பெற்றோருக்கு அபராதம் அல்லது இழப்பீட்டுத் தொகையைக் கோர சட்டம் வகை செய்கிறது.

டாரூல் கூரான் சமயப்பள்ளியின் தீ விபத்து தொடர்பில் 11 வயது முதல் 18 வயது வரையிலான எழுவர் சந்தேகத்தின் பேரில் மேல் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 

spot_img

latest articles

explore more