Homeஅரசியல்கட்சியின் நடவடிக்கைகளை கம்பளத்தில் மறைத்து வைக்க முடியாது -ரபிஸி ரம்லி

கட்சியின் நடவடிக்கைகளை கம்பளத்தில் மறைத்து வைக்க முடியாது -ரபிஸி ரம்லி

பெட்டாலிங் ஜெயா, மே 23

பிகேஆர் கட்சியில் ஒற்றுமை எனும் பெயரில் அதன் பிரச்சினைகளைக் கம்பளத்தில் மறைத்து வைக்கும் போக்கு மாற வேண்டுமென டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லி குறிப்பிட்டுள்ளார்.

கட்சியில் நிலவும் கருத்து வேறுபாடுகள் வெளிப்படையாக விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்பட வேண்டுமே ஒழிய, அவற்றை மறைத்து வைத்து வேடிக்கை பார்க்கக் கூடாதென்றும் அவர் வலியுறுத்தினார்.

தேர்தலுக்குப் பின்னர் அமையும் மத்திய செயலவை கட்சியில் புத்தாக்கத்தை நிலைநிறுத்தி சேவையாற்ற வேண்டுமென்றும் தலைமையின் எல்லா திட்டங்களுக்கும் கேள்வி கேட்காமல் தலையாட்டி பொம்மைகளாக உறுப்பினர்கள் இருக்கக் கூடாதென்றும் ரபிஸி ரம்லி வலியுறுத்தினார்.

 

spot_img

latest articles

explore more