ஈப்போ:
பேராக் மாநில அரசின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள மாநில அளவிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் சுமார் 20,000 பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சி வரும் நவம்பர் 14ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு ஈப்போ, இண்டேரா மூலியா விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கடந்த காலங்களைப் போலவே, பல இனங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றுகூடுவார்கள் என மாநில மனிதவளம், சுகாதாரம், இந்தியர் விவகாரங்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுத் துறை செயற்குழு தலைவர் டத்தோ A. சிவநேசன் தெரிவித்தார்.
மேலும், பேராக் சுல்தான் சுல்தான் நஸ்ரின் முய்சுடின் ஷா, மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சாராணி முகமட் மற்றும் மாநில அரசு அதிகாரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளனர்.
வருகையாளர்களுக்காக அருஞ்சுவை உணவுகளும் செவிக்கும் கண்ணுக்கும் விருந்தளிக்கும் இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக டத்தோ A. சிவநேசன் கூறினார்.


