டலஹாசி, ஜூலை 24
இங்கிலாந்தின் முன்னணி கால்பந்து அணிகளில் ஒன்றான டோட்டன்ஹம் ஹொஸ்பெர், அடுத்த பருவத்திலும் அதிரடி படைக்க தயாராகி வருகின்றது. இந்நிலையில் நேற்று அவ்வணி பிரான்ஸின் முன்னணி கால்பந்து அணியான பிஎஸ்ஜியை சந்தித்து விளையாடியது.
இந்த ஆட்டத்தில் டோட்டன்ஹம் அணிக்கான முதல் கோலை எரிக்சஸ் புகுத்தினார். பின்னர் எடிசன் கவானி புகுத்திய கோலினால் ஆட்டம் சமநிலை ஆனது. பின்னர் பிஎஸ்ஜி அணியின் கோல் காவலர் செய்த தவறினால். டோட்டன்ஹம் 2 என்ற கோல் எண்ணிக்கையில் முன்னிலை பெற்றது.
பிஎஸ்ஜி அணியும் டோட்டன்ஹம் அணிக்கு ஈடான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஆட்டத்தை 2 என்ற கோல் எண்ணிக்கையில் சமநிலைப் படுத்தியது. பின்னர் பிற்பாதியில் டோட்டன்ஹம் அணி 2 கோல்களை புகுத்தியது. பிஎஸ்ஜி அணி ஆட்டக்காரருக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டதால், 10 பேருடன் பிஎஸ்ஜி விளையாடியது. அதுதான் இந்த தோல்விக்கு காரணமென கூறப்படுகின்றது.
டோட்டன்ஹம் அணியை பொறுத்தவரையில் இளம் ஆட்டக்காரர்களுடன் சிறந்த ஆட்டத்தை அது வெளிப்படுத்தியது. இந்நிலையில் அடுத்த பருவத்திற்கான பிரிமியர் லீக் போட்டியில் டோட்டன்ஹம் அதிரடி படைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த முறை பிரிமியர் லீக் போட்டியில் டோட்டன்ஹம் 2ஆம் இடத்தை பிடித்தது.


