ஜாசின், ஜூலை 24-
பிறந்து 6 நாட்களான ஆண் குழந்தை ஒன்று கிணற்றில் இறந்து கிடந்தது.சுமார் 20 அடி ஆழத்தில் இந்தக் குழந்தை கிடந்தது.கம்போங் ஒன் லோக் பத்தாங் மலாக்கா வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இந்த திடுக்கிடும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உடலில் காயம் எதுவும் இல்லாது தொப்புள் கொடியுடன் அக்குழந்தை வெள்ளைத் துணியில் சுற்றப்பட்ட நிலையில் மீட்டெடுக்கப்பட்டது.சுமார் இரவு 7 மணியளவில் அங்குள்ள பொதுமக்கள் வழங்கிய தகவலின் படி ஜாசின் பிஸ்தாரி தீயணை
ப்புத்துறை இலாகா சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்தனர்.
சுமார் 3 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு அக்குழந்தை மீட்கப்பட்டது.மாறாக அக்குழந்தையின் தந்தை ஜாசின் காவல்நிலையத்தில் தமது குழந்தை காணாமல் போனதாகப் புகார் செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.தனது மனைவியின் அரவணைப்பில் அக்குழந்தை அறையில் உறங்கிக்கொண்டிருந்ததாக அவர் புகார் செய்துள்ளார்.
எனினும் அவரின் புகாரின் பின்னணியில் ஏதோ பல மர்ம முடிச்சுகள் இருந்திருக்க கூடும் என சந்நேகத்தின் பேரில் காவல்துறையினர் துரித விசாரணை செய்து வருவதாக ஜாசின் மாவட்ட போலிஸ் தலைவர் துணை சுப்ரிடெண்டன் அர்ஷாட் அபு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.பிரேத பரிசோதனைக்காக அக்குழந்தை மலாக்கா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே தொடர்பில் அக்குழந்தையின் குடும்ப உறுப்பினர்கள் அறுவரை சந்தேகத்தின் பேரில் ஜாசின் மாவட்ட போலிஸ் அதிகாரிகள் கையுங் களவுமாக பிடித்துள்
ளனர்.மூன்று ஆண்கள் மற்றும் 3 பெண்களை அவர்கள் கைது செய்துள்ளனர்.20 முதல் 30 வயது நிரம்பிய இவர்கள் அறுவரும் காலை 9 மணியளவில் கைது செய்யப்பட்டு ஜாசின் காவல்நிலையத்தில் 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை இரவு 7.45 அளவில் தனது குழந்தை காணாமல் போனதாக சம்பந்தப்பட்ட தந்தை ஜாசின் காவல் நிலையத்தில் புகார் செய்ததைத் தொடர்ந்த மறுநாள் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு தனது வீட்டின் அருகிலுள்ள கிணற்றில் அக்குழந்தையை மீட்டெடுக்கப்பட்டது.அக்குழந்தை வெள்ளை துணியில் சுற்றிய நிலையில் கிணற்றுக்குள்ளிருந்து வெளியே எடுத்தனர் தீயணைப்புத்துறையினர்.


