Homeமலேசியாஎதிர்கட்சி தலைமைத்துவ கட்டமைப்பு நகைச்சுவையானது - நஜிப்

எதிர்கட்சி தலைமைத்துவ கட்டமைப்பு நகைச்சுவையானது – நஜிப்

கோலாலம்பூர், ஜூலை.25 – 

எதிர்கட்சி கூட்டணி அண்மையில் அறிவித்த அதன் தலைமைத்துவ கட்டமைப்பு நகைச்சுவையானது என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.  அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற வயதானவர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு வழங்கும் திட்டம் போல எதிர்கட்சியின் தலைமைத்துவம் வடிவமைக்கப்பட்டுள்ளது என நஜிப் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சி கூட்டணியில் தலைமைத்துவத்தில் மூன்று நபர்கள் உயர் பதவிகளை அலங்கரித்தாலும் அதில்  எந்த நபருக்கு  உண்மையான அதிகாரம் உள்ளது என்பது தெரியமால் எதிர்கட்சிகள் குழம்பியிருக்கின்றன.

அதேவேளையில் திரை மறைவில் எதிர்கட்சிகளை இயக்கி கொண்டிருக்கும் டி.ஏ.பி வேண்டுமென்றே உயர் பதவியைக் கோராமல் இருப்பது அரசியல் சதித்திடம் என நஜிப் வருணித்தார்.

“எதிர்கட்சியின் பிரதமர் வேட்பாளருக்கு 90 வயதைக் கடந்த ஒரு நபரை அடையாளப்படுத்த எதிர்கட்சிகள் விரும்புகின்றன. ஆனால் அவர் நாடாளுமன்ற உறுப்பினரும் இல்லை. அவரின் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் ஓர் இடம் மட்டுமே உள்ளது.” என நஜிப் தெரிவித்தார்.

அரசியலில் எண்கள் எப்போதும் ஏமாற்றது என நஜிப் தெரிவித்தார். மலேசியாவின் எதிர்கட்சி கூட்டணியில் டிஏபி அதிக இடங்களை வைத்திருப்பதை யாரும் மறுக்க முடியாது என நஜிப் கூறினார்.

டிஏபி கட்சியில் கடந்த 50 ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு தலைவர் தம்மை சிறை வைத்த நபரை பிரதமர் வேட்பாளர் என கூறி கொண்டு மலாய் சமூகத்தை ஏமாற்ற நினைக்கிறார் என நஜிப் கூறினார்.

 

spot_img

latest articles

explore more