Homeமலேசியாபாலியல் துன்புறுத்தலுக்கு இலக்கான சிறார்களுக்கு சட்ட உதவி

பாலியல் துன்புறுத்தலுக்கு இலக்கான சிறார்களுக்கு சட்ட உதவி

கோலாலம்பூர், ஜூலை 27-

பாலியல் துன்புறுத்தல்  சம்பவங்களில் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கும் 2017 சட்ட உதவி சட்ட மசோதா நாடாளுமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டது. சட்ட உதவிச் சட்டம் 1971க்கான சட்ட மசோதாவை பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் சைட் தாக்கல் செய்தார்.

இதன் மூலம் பாலியல் கொடுமைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு எழுத்துப்பூர்வமானச் சட்டத்தின் கீழ் சட்ட ஆலோசனை வழங்கப்படும். அதோடு மட்டுமின்றி தங்களின் தரப்புக்கு உதவும் பொருட்டு ஒரு துணை வழக்கறிஞர் சம்பந்தப்பட்ட தரப்புக்கு உதவியாய் இருப்பார். இந்த முறை நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தில் 2ஆவது முறையாக இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என்று அஸாலினா கூறினார்.

spot_img

latest articles

explore more