Homeவிளையாட்டுசாம்பியன்ஸ் லீக் - காலிறுதியில் மென்செஸ்டர் சிட்டி!

சாம்பியன்ஸ் லீக் – காலிறுதியில் மென்செஸ்டர் சிட்டி!

மென்செஸ்டர், மார்ச்.8 –

2017/18 ஆம் பருவத்துக்கான சாம்பியன்ஸ் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் சிட்டி காலிறுதி சுற்றுக்கு தேர்வாகியுள்ளது. புதன்கிழமை நடந்த இரண்டாம் சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி 1- 2 என்ற கோல்களில் சுவிட்சர்லாந்தின் எப்.சி பேசலிடம் தோல்வி கண்டது.

எனினும் முதல் கட்ட ஆட்டத்தில் 4 – 0 என்ற கோல்களில் வெற்றி பெற்ற மென்செஸ்டர் சிட்டி, 5 – 2 என்ற ஒட்டு மொத்த கோல்களில் காலிறுதி சுற்றுக்கு தேர்வாகியுள்ளது. இங்கிலீஷ் பிரீமியர் லீக் பட்டத்துக்கு குறி வைத்துள்ள மென்செஸ்டர் சிட்டி நிர்வாகி பெப் குவார்டியோலா தமது அணியில் ஆறு மாற்றங்களைச் செய்திருந்தார்.

ஆட்டம் தொடங்கிய 8 ஆவது நிமிடத்தில் கப்ரியல் ஜீசஸ், மென்செஸ்டர் சிட்டியின் முதல் கோலைப் போட்டார். எனினும் 9 நிமிடங்கள் கழித்து முஹமட் எலினோவ்சி போட்ட கோலின் மூலம் எப்.சி பேசல் ஆட்டத்தை சமப்படுத்தியது.ஆட்டம் முடிவடைய 19 நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது மைக்கல் லாங் , எப்.சி பேசலின் வெற்றி கோலை அடித்தார்.

spot_img

latest articles

explore more