கோலாலம்பூர், ஜூலை 28-
அடுத்த மாதம் முதலாம் தேதி முதல் சுற்றுலா வரியை அமல்படுத்தும் வகையில் நாட்டிலுள்ள அனைத்து தங்கும்விடுதிகளின் (ஹோட்டல்) முதலாளிகளும் சுற்றுலாத்துறை அமைச்சிடம் தங்களை பதிந்துக்கொள்ள கொள்ள வேண்டும் என அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அப்துல் அஜிஸ் தெரிவித்தார்.
ஹோட்டல் முதலாளிகளை நாங்கள் தேடி செல்வோம். அவர்கள் அனைவரும் தங்களைப் பதிவு செய்துக் கொள்ள வேண்டியது அவசியம் என செய்தியாளகளிடம் அவர் கூறினார்.
இந்த புதிய சுற்றுலா வரியை மலேசியர்கள் செலுத்த வேண்டிய அவசியமில்லை. மாறாக, அந்நிய நாட்டு சுற்றுப்பயணிகளே நாள் ஒன்றுக்கு 10 வெள்ளி வீதம் சுற்றுலா வரியை செலுத்த வேண்டும் என்று அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அப்துல் அஜிஸ் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.
எனினும், ஐந்து நட்சத்திர அந்தஸ்துக்கும் குறைவாக உள்ள ஹோட்டல்களுக்கும் புறநகர் பகுதிகளிலுள்ள தங்கும் விடுதிகளுக்கும் இக்கட்டணம் பொருந்தாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


