Homeமலேசியாகல்விரிவர்சைட் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியரை இடமாற்றுங்கள்!

ரிவர்சைட் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியரை இடமாற்றுங்கள்!

கோலசிலாங்கூர், ஜூலை 31- 
இங்குள்ள ரிவர்சைட் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியரின் செயல்பாட்டின் மீது எங்களுக்கு முழு திருப்தி இல்லை. அவரையும் அவருக்கு உடந்தையாக இருக்கும் துணைத்தலைமையாசிரியரையும் வேறொரு பள்ளிக்கு இடமாற்றம் செய்ய வேண்டுமென அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் போர்க்கொடி தூக்கியுள்ளது.

இது குறித்து அதன் தலைவர் பத்மநாதன் கூறுகையில், இப்பள்ளிக்கு சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் புதிதாக வந்ததிலிருந்து மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக அவருடன் இணைந்து செயல்படவே நாங்கள் விரும்பினோம். ஆனால், இந்த 9 மாதங்களில் அவர் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தை முற்றிலுமாக புறக்கணிப்பதோடு எங்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருவதாகக் கூறினார்.

அவரால் தினமும் பல்வேறு பிரச்னைகள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, அவருக்கும் பள்ளியிலுள்ள பணியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் முதலானோருக்கும் இடையில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் நிகழ்ந்து வருகின்றன. இது குறித்து எங்களின் பிள்ளைகள் எங்களிடம் வந்து கூறும்போது மனதிற்கு வேதனையாக இருப்பதோடு எங்களின் பிள்ளைகளின் கல்விக்கு பாதிப்புகள் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சுகின்றோம்.

தலைமையாசிரியர் மற்றும் துணைத்தலைமையாசிரியர் மீது பல்வேறு அதிருப்திகளை கூறிய அவர், இது குறித்து பலமுறை மாவட்ட கல்வி இலாகா, மாநில கல்வி இலாகா ஆகியவற்றிடம் புகார் அளித்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏமாற்றமளிப்பதாக பத்மநாதன் குறிப்பிட்டார்.

மாணவர்கள் நலன் சார்ந்த பல விவகாரங்களில் அவர் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தை புறக்கணித்து தன்னிச்சையாக செயல்பட்டு வருவது இப்பள்ளி மாணவர்களின் கல்வி போதனைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அவரையும் துணைத்தலைமையாசிரியரையும் வேறு பள்ளிக்கு இடமாற்ற வேண்டுமென நாங்கள் கருதுகிறோம்.

இல்லையென்றால் மிகப் பெரிய அளவில் நாங்கள் போராட்டத்தை மேற்கொள்வோம் என பத்மநாதன் எச்சரிக்கை விடுத்தார்.

spot_img

latest articles

explore more