பாங்கி, ஆக. 4 -
இதுவரை பணிவாய்ப்பு பெறாத தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்விப் பயிற்சி (திவெட்) பட்டதாரிகள், தங்களது வேலைவாய்ப்புச் சாத்தியக்கூறுகளை உயர்த்திக் கொள்ள ‘மைஃபியூச்சர்ஜாப்ஸ்’ (MYFutureJobs) இணையதளத்தைப் பரவலாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மனிதவள அமைச்சு, சமூகப் பாதுகாப்பு அமைப்பின் (பெர்கெசோ) வாயிலாக நிர்வகிக்கும் இத்தளம், நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு வேலை வழங்குநர்களின் வாய்ப்புகளை ஒருங்கிணைத்து வழங்கி, பட்டதாரிகளின் தொழில்வாழ்க்கைக்குச் சிறந்த...
ஈப்போ, ஜூலை 29 —
மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சி, எதிர்காலத் திட்டமிடல் மற்றும் முன்னாள் மாணவர் சங்கங்களின் ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில், மலேசியத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களின் பேரவை (PERTAMA) ஏற்பாட்டில் 17-வது ஆண்டு தேசிய பேராளர் மாநாடு 2026 நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் செயல்பட்டு வரும் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மற்றும் தமிழ்க்கல்வி வளர்ச்சியில்...
ஷா அலாம்:
ஷா ஆலாம் ஸ்ரீ முருகன் நிலையத்தின் ஏற்பாட்டில், மாணவர்களின் கல்வி மேம்பாட்டினை இலக்காகக் கொண்ட ‘கல்வி யுத்தம் 2026’ (Kalvi Yuttham 2026) திட்டத்தின் அதிகாரப்பூர்வத் தொடக்க விழா, ஷா ஆலாம், சுங்கை ரெங்கம் மண்டபத்தில் (Dewan Konvensyen SJK T Sg. Renggam) இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இன்றைய நிகழ்வு, கல்வியில் சிறந்த விளங்கிய UP 1 High...
ஜொகூர் பாரு:
மாணவர்கள் எதிர்காலத்தில் தலைசிறந்து விளங்க விரும்பினால், கல்வியுடன் தன்னாளுமை திறனைக் கொண்டிருக்க வேண்டும் என்று நாடாளுமன்ற மேலவை உறுப்பினர், செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன் தெரிவித்தார்.
ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பள்ளியின் திறந்த மண்டபத்தில் நடைபெற்ற இவ்வாண்டு புறப்பாட விருது வழங்கும் விழாவில் செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன் கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியின் மூலம் விளையாட்டு, சீருடை இயக்கம், கழகம் மற்றும் பல்வேறு...
சிகாமாட்:
கல்வியே மனிதவள வளர்ச்சிக்கான முதன்மை அடித்தளமாக இருப்பதை மடானி அரசு தொடர்ந்து வலியுறுத்துவதாகச் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்தார்.
கல்வி அறிவு ஒழுக்கத்தையும் போட்டித்திறனையும் கொண்ட தலைமுறையை உருவாக்கும் என்று சிகாமாட்டிலுள்ள பூலோ காசாப் இடைநிலைப்பள்ளியின் எஸ்பிஎம் தேர்வு எழுதவுள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய யுனேஸ்வரன் கூறினார்.
மேலும், அவர் தனது உரையில், “மாணவர்களின் வெற்றியை வெறும் தேர்வு...
பத்துமலை, ஆக 4-
ஸ்ரீ முருகன் நிலையத்தின் கல்வி யாத்திரை பத்துமலை திருத்தலத்தில் மிகச் சிறப்பான முறையில் நடைபெறுவதற்கு இடத்தையும், இதர வசதிகளையும் ஏற்படுத்தித் தந்த ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ டத்தோ ஆர். நடராஜாவிற்கு இக் கல்வி நிலையம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.
“பத்துமலை திருத்தலத்தில் கடந்த 31 ஆண்டுகளாக ஸ்ரீ முருகன் நிலையம் கல்வி யாத்திரையை...