Homeஇந்தியா/ ஈழம்சசிகலா சொத்து குவிப்பு வழக்கு: நீதிபதி செய்த செயல்

சசிகலா சொத்து குவிப்பு வழக்கு: நீதிபதி செய்த செயல்

சசிகலாவின் சீராய்வு மனுவை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்விலிருந்து நீதிபதி ரோகின்டன் நாரிமன் தானாக விலகியுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தண்டனையை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சொன்னபடி விசாரணைக்கு சசிகலாவின் மனு வரவில்லை. இதற்கு காரணம், நீதிபதிகள் அமர்வில் ஏற்பட்ட மாற்றம் தானாம். சசிகலாவின் சீராய்வு மனுவை நீதிபதிகள் அமிதவராய் கோஷ், ரோஹின்டன் நாரிமன் அமர்வு இன்று விசாரிக்கவிருந்தது.

ஆனால், மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோதக்கின் கோரிக்கையை ஏற்று ரோகின்டன் நாரிமன் தானாக இவ்வழக்கிலிருந்து தன்னை விடுவித்து கொண்டார். நாரிமனின் தந்தை பாலி ஏற்கனவே சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா – சசிகலா உள்ளிட்ட குற்றவாளிகள் தரப்புக்காக ஆஜரானவர். இதனால் அவரின் மகன் நாரிமன் இதில் நீதிபதியாக இருந்து தீர்ப்பு கூறக்கூடாது என முகுல் அவரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

spot_img

latest articles

explore more