Homeஇந்தியா/ ஈழம்நாட்டின் 13வது துணை ஜனாதிபதியாக  வெங்கையா நாயுடு அமோக வெற்றி

நாட்டின் 13வது துணை ஜனாதிபதியாக  வெங்கையா நாயுடு அமோக வெற்றி

புதுடில்லி: நாட்டின்  13வது துணை ஜனாதிபதியாக  வெங்கையா நாயுடு, 68, தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்ட, கோபால கிருஷ்ண காந்தியை விட, 244 ஓட்டுகள் அதிகம் பெற்று, அமோக வெற்றி பெற்றார்.

நாட்டின், 14வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப் பதற்கான தேர்தல், கடந்த மாதம், 17ல் நடந்தது. இதில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டி யிட்ட, ராம்நாத் கோவிந்த் அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து, கடந்த 25ல், அவர், ஜனாதிபதி யாக பதவியேற்றார்.

தொடர்ந்து, 10 ஆண்டுகள், 12வது துணை ஜனாதிபதியாக பதவி வகித்து வரும், ஹமீது
அன்சாரியின் பதவிக்காலம், ஆகஸ்ட், 10ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், ஆக., 5ல் நடக்கும் என, தேர்தல் கமிஷன் அறிவித்தது.

வேட்பு மனு

இதில், பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், வெங்கையா நாயுடுவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி கள் சார்பில், மேற்கு வங்க முன்னாள் கவர்னரும், மஹாத்மா காந்தி – ராஜாஜியின் பேரனுமான, கோபால கிருஷ்ண காந்தியும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். துணை ஜனாதிபதி தேர்தலில், லோக்சபா மற்றும் ராஜ்யசபா, எம்.பி.,க் களுக்கு மட்டுமே ஓட்டு போட உரிமை உள்ளது.

மேலும், ஜனாதிபதி தேர்தலை போலவே, துணை ஜனாதிபதி தேர்தலிலும், எம்.பி.க்கள்,
யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என, கட்சி கொறடாக்கள் உத்தரவிட முடியாது.

காலியிடங்கள்

பார்லிமென்டின் இரு சபைகளையும் சேர்த்து, மொத்த உறுப்பினர் இடங்கள், 790. இதில், லோக்சபாவில், இரண்டு இடங்களும், ராஜ்ய சபாவில், இரண்டு இடங்களும் காலியாக உள்ளன. கோர்ட் உத்தரவு காரணமாக, பா.ஜ., – எம்.பி., சேதி பஸ்வான் ஓட்டளிக்க முடியாது. துணை ஜனாதிபதி தேர்தலுக்காக, டில்லி பார்லிமென்ட் வளாகத்தில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எம்.பி.க்கள், ஓட்டு போட, சிறப்பு ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஓட்டுப் பதிவு, நேற்று காலை, 10:00 மணிக்கு துவங்கி யது. பிரதமர், நரேந்திர மோடி முதலில் ஓட்டளித்தார். அவரை தொடர்ந்து,எம்.பி.,க்கள் ஓட்டு போட்டனர்.

முன்னிலை

மாலை, 5:00 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றது. 785 ஓட்டுகளில், 771 ஓட்டுகள் பதிவா யின. 14 எம்.பி.,க்கள் ஓட்டு போட வில்லை. இதையடுத்து, மாலை, 6:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியது.துவக்கம் முதலே வெங்கையா நாயுடு முன்னிலை வகித்தார். இரவு, 7:00 மணிக்கு, ஓட்டு எண்ணிக்கை முடிந்து, வெங்கையா நாயுடு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பதிவான, 771 ஓட்டுகளில், வெங்கையா நாயுடு, 516 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
கோபால கிருஷ்ண காந்திக்கு, 244 ஓட்டுகள் கிடைத்தன. செல்லாதவையாக, 11 ஓட்டுகள் அறிவிக்கப்பட்டன.நாட்டின், 13வது துணை ஜனாதிபதியாக, வெங்கையா நாயுடு, 11ம் தேதி பதவி ஏற்கிறார்.

பிரதமர் வாழ்த்து

துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற, வெங்கையா நாயுடுவுக்கு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள் ளனர்.பிரதமர் மோடி, ‘டுவிட்டர்’ வாயிலாகத் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், ‘துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள, வெங்கையா நாயுடுவுக்கு, வாழ்த்துகள். அவரது பதவி காலம், சிறப்பாகவும், ஊக்கம் அளிக்கும் வகையில் அமையவும் வாழ்த்துகிறேன்’ என கூறியுள்ளார்.

spot_img

latest articles

explore more