Homeவிளையாட்டுகட்டொழுங்கு விவகாரத்தில் பாகுபாடு இல்லை- மரினா சீன்

கட்டொழுங்கு விவகாரத்தில் பாகுபாடு இல்லை- மரினா சீன்

கோலாலம்பூர், ஆக.9 –

29 ஆவது சீ விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கவுள்ள தேசிய விளையாட்டாளர்கள் அனைவரும் கட்டொழுங்குடன் நடந்து கொள்ள வேண்டும் என தேசிய விளையாட்டாளர்கள் குழுவுக்கு தலைமையேற்கும் டத்தோ மரினா சீன் தெரிவித்துள்ளார்.

கட்டொழுங்கு விவகாரத்தில் தங்கப் பதக்கம் வெல்லும் விளையாட்டாளர், பதக்கம் வெல்லாத விளையாட்டாளர் என பாகுபாடு பார்க்கப்படுவதில்லை என அவர் தீர்க்கமாக கூறினார். சீ விளையாட்டுப் போட்டி முடியும் வரை அனைத்து விளையாட்டாளர்களும் கட்டொழுங்குடன் நடந்து கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

கட்டொழுங்கு பிரச்சினையில் சிக்கி கொள்ளும் விளையாட்டாளர்கள், தேசிய விளையாட்டாளர்கள் அணியில் இருந்து நீக்கப்படலாம் என்றும் அவர் எச்சரித்தார். தேசிய திடல் தட குழுவில் எஸ். கோமளம் ஷெல்லி நீக்கப்பட்டிருப்பது குறித்து மரினா இவ்வாறு தெரிவித்தார்.

மகளிர்க்கான 100 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில் பங்கேற்கவிருந்த எஸ். கோமளம், கட்டொழுங்குப் பிரச்சினையின் காரணமாக , தேசிய விளையாட்டாளர்கள் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் தமக்கு அதிகாரபூர்வ கடிதம் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார். விளையாட்டு சங்கங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு , சீ விளையாட்டு செயலகம் எப்போதும் கட்டுப்படும் என்று அவர் தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more