கோலாலம்பூர், அக். 2
அடுத்த ஆண்டு தொடங்கி குமாஸ்தாக்களில் வேலையை ஆசிரியர்கள் செய்ய தேவையில்லை என கல்வியமைச்சர் டாக்டர் மஸ்லி மாலேக் தெரிவித்துள்ளார்.
நாடு முழுமையும் ஆசிரியர்கள் பணியை மேம்படுத்தும் நோக்கத்தை இது கொண்டிருக்கிறது. சிறந்த மாணவர் சமுதாயத்தை உருவாக்குவதை ஆசிரியர்கள் முழு கவனம் செலுத்த இது வகை செய்யும் என்று அவர் சொன்னார்.
ஆசிரியர்களின் ஆற்றல்கள் கற்பிக்கும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படாதது இழப்பாகும். அவர்கள் மீது குமாஸ்தா வேலையை சுமத்தக்கூடாது என தலைநகரில் சீனப்பள்ளிகளுக்கான தேசிய மொழி தரத்தை மேம்படுத்தும் கலந்துரையாடலை தொடக்கி வைத்த பின் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
ஆசிரியர்களின் பணிச்சுமையை குறைப்பது தொடர்பான ஆய்வுகளை தன்னுடைய அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார்..
இந்த ஆண்டு டிசம்பரில் தாக்கல் செய்யப்படும். இனி குமாஸ்தா வேலையை ஆசிரியர்கள் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்று அவர் குறிப்பிட்டார்.
சொந்த பிள்ளைகள் போல ஆசிரியர்கள் மாணவர்களை நேசிக்கின்றனர். பாடங்களை போதிக்கும்போது மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர். ஆனால், குமாஸ்தா வேலைகளையும் ஆசிரியர்கள் மீது சுமத்தப்படுவதால் இவற்றையெல்லாம் நாம் இழந்துவிடுவோம். இது மாற்றப்பட வேண்டும். விரைவில் இது அமல்படுத்தப்படும் என்று மஸ்லி மாலேக் தெரிவித்தார் .


