Homeமலேசியாமலேசிய சாதனைப் புத்தகத்தில் ரகு-சூரியா

மலேசிய சாதனைப் புத்தகத்தில் ரகு-சூரியா

கோலாலம்பூர், அக்.2
ஜோகூரிலிருந்து பெர்லீஸ் வரை 1,400 கிலோ மீட்டர் தூரம் நடந்தது மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ரகுவும் அவரது மகன் சூரியாவும் நம் சமுதாயத்திற்கும் பெருமை தேடி தந்துள்ளனர்

அவர்களது சாதனையை அங்கீகரிக்கும் வகையில் சன்வே விலோசிட்டி மோலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சான்றிதழை இளைஞர் விளையாட்டு துறை துணை அமைச்சர் ஸ்டீவன் சிம் வழங்கினார்.

பேராவைச் சேர்ந்த ரகுவும் அவரது மகன் சூரியாவும் சுதந்திர மாதத்தை முன்னிட்டு ஜோகூர் முதல் பெர்லிஸ் வரை நடைபயணத்தை மேற்கொண்டனர். தங்களது பயணத்தின் போது இருவரும் ஜாலோர் கெமிலாங் கொடியையும் பேரா மாநில கொடியையும் ஏந்திச் சென்றனர்.

இந்த பயணத்தையும் முடிப்பதற்கு அவர்களுக்கு 26 நாட்கள் பிடித்தன. நாட்டின் மீதுள்ள பற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்த நடைப்பயணம் அமைந்ததாக ரகு தெரிவித்தார்.

இந்த நடைப்பயணம் சிரமானதாக இருந்தாலும் ஒரு சவாலாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்ததாக சூரியா தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more