Homeமலேசியாரோஸ்மாவிற்கு எதிரான நடவடிக்கையில் பழிவாங்கும் நோக்கம் இல்லை -துன் மகாதீர்

ரோஸ்மாவிற்கு எதிரான நடவடிக்கையில் பழிவாங்கும் நோக்கம் இல்லை -துன் மகாதீர்

கோலாலம்பூர், அக் 4
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் மனைவி டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் மீதான நடவடிக்கை சட்டத்திற்கு உட்பட்டு எடுக்கப்பட்டது என்றும் இதில் பழிவாங்கும் எண்ணம் ஏதும் இல்லை என்றும் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

ஊழல் தடுப்பு ஆணையத்தால் தனது தாயார் கைது செய்யப்பட்டது ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று ரோஸ்மாவின் மகள் நோர்யான நஜ்வா கூறியிருப்பது தொடர்பில் மகாதீர் இவ்வாறு கருத்துரைத்தார்.

தவறு செய்தவர்கள் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட வேண்டும் என்பது சட்டம். அதை தவிர்த்து இதில் பழிவாங்கும் திட்டம் எதுவும் இல்லை என புத்ராஜெயாவில் நடைபெற்ற பேரிடர் நிர்வாகம் மீதான ஆசியான் அமைச்சர் நிலைக் கூட்டத்தில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more