Homeமலேசியாதீயணைப்பு வீரர்களுக்கு ஆக்கப்பூர்வ பயிற்சிகள் தேவை -துன் மகாதீர்

தீயணைப்பு வீரர்களுக்கு ஆக்கப்பூர்வ பயிற்சிகள் தேவை -துன் மகாதீர்

கோலாலம்பூர், அக்.4
மீட்பு பணியில் ஈடுபடும் தீயணைப்பு வீரர்களுக்கு மேலும் ஆக்கப்பூர்வமான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் வலியுறுத்தினார்.

பூச்சோங், தாமான் புத்ரா பெர்டானாவிலுள்ள ஈயக்குட்டையில் தவறி விழுந்த 17 வயது ஆடவரை மீட்கும் பணியில் ஈடுபட்ட ஆறு தீயணையப்பு வீரர்கள் உயிரிழந்தச் சம்பவம் வருத்தமளிக்கிறது.

இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழ்வதைத் தடுக்க அவர்களுக்குத் ஆக்கப்பூர்வமான பயிற்சிகளை அத்துறை அளிக்க வேண்டும் என்று புத்ராஜெயாவில் நடைபெற்ற பேரிடர் நிர்வாகம் மீதான ஆசியான் அமைச்சர் நிலைக் கூட்டத்தில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

ஒரு சிறுவனைத் தேடி மீட்கும் முயற்சியில் இவர்கள் அறுவரும் ஏன் மூழ்கி மாண்டனர் என்ற உண்மையானக் காரணம் இன்னும் தெரியவில்லை. இது தொடர்பில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இவர்களின் குடும்பத்தினர் அனைவரும் சற்று பொறுமையாய் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பாதிக்கபட்டவர்களின் குடும்பத்திற்கு உதவிகள் வழங்குவது குறித்து அரசு ஆராயும் என அவர் குறிப்பிட்டார்.

spot_img

latest articles

explore more