போர்ட்டிக்சன், அக். 6
போர்ட்டிக்சன் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மக்கள் திலகம் எம்ஜிஆரின் பாடலுக்கு நடனமாடி போர்ட்டிக்சன் இந்தியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
நேற்று இரவு போர்ட்டிக்சன் புக்கிட் பிளாண்டோக்கில் நடைபெற்ற இந்திய கலை, கலாசார நிகழ்வில் கலந்து கொண்ட அவர் சுமார் 3 நிமிடங்கள் எம்ஜிஆர் பாடலுக்கு நடமானடினார்.
பிகேஆர் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயில் போர்ட்டிக்சன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டேனியல் பாலகோபால் அப்துல்லா உள்ளிட்ட பிரமுகர்களும் வருகை தந்திருந்தனர்.
எம்ஜிஆர் பாடல்கள் எனக்கு பிடிக்கும். அவரது பாடல்களில் சில வரிகளையும் என்னால் ஞாபகப் படுத்தி பாட முடியும் என்று டத்தோஸ்ரீ அன்வார் அந்த நிகழ்வில் தெரிவித்தார்.
எதிர்வரும் 13ஆம் தேதி நடைபெறும் வாக்களிப்பு தினத்தில் மக்கள் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும். சிலாங்கூரில் இதற்கு முன்பு நடைபெற்ற 3 இடைத்தேர்தல்களில் குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்களே வாக்களித்திருக்கின்றனர். போர்ட்டிக்சனில் இந்த நிலைமை இருக்கக்கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டார்.


