Homeஇந்தியா/ ஈழம்கர்நாடகாவில் பஸ் ஓட்டும் குரங்கு; சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ

கர்நாடகாவில் பஸ் ஓட்டும் குரங்கு; சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ

பெங்களூரு, அக் 6
கர்நாடக அரசு போக்குவரத்து கழக பஸ்சில் ஸ்டீரியங் மீது அமர்ந்து கொண்டு அதனை திருப்பும் வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதனை பஸ்சின் ஓட்டுநர் பார்த்து ரசிப்பதுடன், முன்னால் பார்த்து ஸ்டீரியங்கை இப்படி திருப்பு… அப்படி திருப்பு என சொல்கிறார். ஆனால் அந்த குரங்கோ ஸ்டீரியங் மீது அமர்ந்து கொண்டு தனது இஷ்டத்திற்கு பஸ்சை ஓட்டுகிறது.

ஆபத்தை அறியாமல் குரங்குடன் விளையாடி பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்த இந்த காட்சிகளை பஸ்சில் பயணித்த ஒருவர் தனது கைப்பேசியில் படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துக் கொண்ட அந்த ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

spot_img

latest articles

explore more