Homeமலேசியாதெலுங்கு மக்கள் தங்களின் தாய்மொழியைக் கற்க உரிமை உண்டு -அமைச்சர் வேதமூர்த்தி

தெலுங்கு மக்கள் தங்களின் தாய்மொழியைக் கற்க உரிமை உண்டு -அமைச்சர் வேதமூர்த்தி

புத்ரா ஜெயா, அக் 9-
இந்த நாட்டில் மட்டுமல்ல; உலகில் வாழும் ஒவ்வொரு மாந்தனுக்கும் தன் தாய்மொழியைக் கற்க வேண்டிய ஆத்மார்த்த கடப்பாடு இருக்கிறது. ஐநா மன்றம்கூட இதை பலமுறை வலியுறுத்தியுள்ளது. எனவே, ஒருவரின் தாய்மொழிக் கல்வியை மறுதலிக்கவோ குறைகூறவோ முற்படுதல் அத்தனை பொருத்தமான செயல் இல்லை என்று பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் வாழ்கின்ற சுமார் நான்கு இலட்ச தெலுங்கு மக்கள், 2.3 மில்லி-யன் மக்கள் தொகையைக் கொண்ட இந்திய சமுதாயத்தில் சிறுபான்மை சமுதாயத்தினராக இருந்தாலும், அவர்கள் தங்களின் தாய்மொழியை கற்க அனைத்து உரிமையும் உண்டு.

மலேசிய தெலுங்கு சங்கத்தின் 42-ஆவது தேசியப் பேராளர் மாநாடு, கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 7-ஆம் நாள் ராவாங்கில் நடைபெற்றபோது, அதில் கலந்து கொண்ட என்னிடம், மலேசியக் கல்வி சான்றிதழ் என்னும் எஸ்பிஎம் தேர்வில் தெலுங்கு மொழியும் விருப்பப்பாடமாக இடம்பெற உதவும்படி கோரிக்கை வைத்தனர்.

மலேசியத் தேர்வு வாரியத்தால் கடந்த 1981ஆம் ஆண்டு இல்தான் கடைசியாக தெலுங்கு மொழிக்கான தேர்வு நடத்தப்பட்டதென்றும் அதன் பின்னர் அவ்வாறு நடைபெறவில்லை என்றும் தெலுங்கு சங்கத்தின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. தற்பொழுது, இடை நிலைப் பள்ளிகளில் தேர்வுப் பாடமாக தெலுங்கு மொழியும் இடம்பெறுவதற்கான முயற்சியை மேற்கோண்டு வருவதாகவும் இதற்கான பாடத்திட்டத்தை வடிவமைக்க ஹைதராபாத் பல்கலைக்கழகத்துடன் இணைந்து முயற்சி மேற்கொள்ளும் அதேவேளை, மலேசிய கல்வி அமைச்சிடமும் விண்ணப்பித்துள்ளோம். எனவே, தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நல அமைச்சரான தாங்களும் இதன் தொடர்பில் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

என்னுடைய உரையில் இதன் தொடர்பில் பதில் சொன்னபோது, பிரதமரிட-மும் கல்வி அமைச்சரிடமும் ஆலோசனை செய்வதாகவும் பரிந்துரைப்ப-தாகவும் தெரிவித்தேன். இதை மையமாக வைத்துதான், தற்பொழுது சமூக ஊடகங்களில் தவறாக விமரிசனம் செய்யப்படுகிறது. என்னுடைய தாய்மொழி தமிழாக இருந்தாலும், இந்திய சமுதாயம் என்னும் எல்லையைக் கடந்து சபா, சரவாக் மக்கள் உட்பட அனைத்து மக்களின் தாய்மொழிக் கல்விக்காகவும் செயல்பட வேண்டிய கடப்பாடு எனக்கு இருக்கிறது என்று அமைச்சர் பொன். வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

latest articles

explore more