தெமர்லோ, அக். 9
கோலாலம்பூர் நோக்கிச் செல்லும் எல்டிபி நெடுஞ்சாலையில் உள்ள லஞ்சாங் ஓய்வெடுக்கும் பகுதியில் உள்ள பெண்கள் கழிப்பறையில் ஆண் சிசு கைவிடப்பட்டுக் கிடந்தது.
இன்று காலை 5.00 மணியளவில் அந்த சிசுவை பார்த்த பெண் ஒருவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
உடை அணிவிக்கப்படாத நிலையில் கழிப்பறையில் அந்த சிசு கிடந்ததாக தெமர்லோ போலீஸ் தலைவர் ஏசிபி ஜூண்டின் மமுட் தெரிவித்தார்.
கழிப்பறை அருகே அந்தப் பெண் குழந்தையின் அழு குரலைக் கேட்டிருக்கின்றார். சுமார் அரை மணி நேரம் வரை அக்குழந்தையின் அழுகுரல் நீடித்துக்கொண்டிருந்தால் சந்தேகப்பட்டு அங்கு சென்று பார்த்தபோது ஆண் சிசு கிடந்ததைக் கண்டு திடுக்கிட்டார்.
வேறொரு இடத்தில் பிரசுவிக்கப்பட்ட அந்த சிசு அந்த கழிப்பறையில் கைவிடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. தற்போது அக்குழந்தை சுல்தான் ஹஜி அப்துல் ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.


