Homeஅரசியல்விடுமுறையில் செல்ல மாட்டேன் -டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடி

விடுமுறையில் செல்ல மாட்டேன் -டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடி

கோலாலம்பூர், அக். 27
விடுமுறையில் செல்லப் போவதில்லை என்றும் தனது நிலைப்பாட்டைத் தொடரப்போவதாகவும் அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

அம்னோ தலைவர்கள் மட்டும் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கப்போவதில்லை. தேசிய முன்னணி உறுப்புகட்சிகளின் தலைவர்களும் விசாரிக்கப்படலாம் என்று அவர் கூறினார்.

இன்று புத்ரா உலக வாணிப மையத்தில் மஇகாவின் 72ஆவது பேரவையை தொடக்கி வைத்தபோது தமதுரையில் இதனை தெரிவித்தார்.

தாம் எதிர்நோக்கும் இதே போன்ற பிரச்னைகளை அவர்களும் எதிர்நோக்கக் கூடும். தமது எதிரான வழக்கு முடியும் வரையில் தாம் விடுமுறையில் செல்ல வேண்டும் என அம்னோவில் சிலர் வேண்டுகோள் விடுத்திருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

நான் விடுமுறையில் செல்ல மாட்டேன். உறுதியாக இருப்பேன். எனது சமயம், இறைவன் ஆணையாக நான் எந்த தவறும் செய்யவில்லை என்று ஸாஹிட் குறிப்பிட்டார்.

நம்பிக்கை மோசடி, கையூட்டு, சட்டவிரோத நாணயப் பரிமாற்றம், தீவிரவாதத்திற்கு நிதி அளிக்கும் ஒழிப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் ஸாஹிட் 45 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெர்சத்து கட்சியில் சேரும்படி டாக்டர் மகாதீர் உங்களை அழைத்தாரா என செய்தியாளர் கேள்வி எழுப்பியபோது, எந்த அறிக்கையும் வெளியிடுவதற்கு முன் நான் கவனமாக இருக்கவேண்டும் என்றார். நானும் துணைத் தலைவரும், 3 தேசிய உதவித் தலைவர்களும் துன் மகாதீர் சந்தித்தோம். நாங்கள் கட்சி தாவவேண்டும் என்பதும் பெர்சத்து கட்சியில் இணையவேண்டும் என்பதும் அவருடைய தெளிவான செய்தியாக அமைந்தது என்று ஸாஹிட் சொன்னார்.

spot_img

latest articles

explore more