Homeமலேசியா90 நிமிடங்கள் இடைவிடாத மழை; பினாங்கு விமான நிலையத்தில் வெள்ளம்

90 நிமிடங்கள் இடைவிடாத மழை; பினாங்கு விமான நிலையத்தில் வெள்ளம்

ஜோர்ஜ்டவுன், அக். 28
சுமார் 90 நிமிடங்கள் வரை பெய்த கனத்த மழையால் பினாங்கு அனைத்துலக விமான நிலையத்திலுள்ள பயணிகள் புறப்படும் முனையத்தில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

சுபாங் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டிய 28 பயணிகள் வெள்ளத்தை கடந்து சென்று விமானத்தில் ஏற வேண்டிய நிலை ஏற்பட்டது. இன்று காலை 9.30 மணியளவில் வெள்ளம் ஏற்பட்டதாக மலேசிய ஏர்போர்ட்ஸ் செண்டிரியான் பெர்ஹாட் மூத்த நிர்வாகி முகமது நட்ஸிம் ஹஷிம் தெரிவித்தார்.

வழக்கத்திற்கு மாறாக மழை பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டது என்றும் 15 நிமிடத்தில் வெள்ளம் தணிந்து விட்டதாக அவர் சொன்னார்.

சம்பந்தப்பட்ட விமானம் புறப்படும் நேரம் நெருங்கிவிட்டதால் விமானத்தை நாங்கள் வேறு இடத்திற்கு மாற்ற முடியவில்லை. அந்த விமானம் புறப்பட்டதும் அந்த முனையம் தூய்மைப் பணிக்காக சுமார் ஒரு மணி நேரம் மூடப்பட்டது.

spot_img

latest articles

explore more